அதிமுக மீது சீமானுக்கு அப்படி என்ன கோபம் : அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி

அதிமுக மீது நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு அப்படி என்ன கோபம் என்று அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி உள்ளார்.

சென்னை:

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் இன்னும் 4 மாதங்களில் வரவுள்ள நிலையில்,அதிமுக,மக்கள் நீதி மய்யம் மற்றும் நடிகர் ரஜினி காந்தின் புதிய கட்சி போன்ற அரசியல் கட்சிகள் எம்.ஜி.ஆரை முன்னிறுத்தி வாக்கு சேகரித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் எம்.ஜி.ஆரைச் சொல்லி பிரச்சாரம் செய்தால் அது அதிமுகவுக்குத்தான் வாக்காகச் சேருமே தவிர, வேற எந்த கட்சிக்கு அது பலன் தராது என்று தெரிவித்தார். மேலும், அவர் பிரபாகரனை ஆதரித்ததாலும், ஈழ விடுதலைக்கு ஆதரவு தெரிவித்ததாலும் எம்.ஜி.ஆர் மீது எங்களுக்கு மரியாதை இருக்கிறது . மற்றபடி அவர் என்ன சிறந்த ஆட்சியைக் கொடுத்தார். தமிழ் மொழி கல்வியில் இருந்து ஆங்கில மொழி கல்வியாக மாற்றினார் என்று கருத்து தெரிவித்தார்.

Read more – வேளாண் சட்டங்களுக்கு எதிராக 2 கோடி கையெழுத்துடன் மனு: குடியரசு தலைவரிடம் இன்று வழங்குகிறார் ராகுல் காந்தி

சீமானின் இந்த கருத்துக்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது: முன்னாள் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆரின் புகழை யாராலும் அழிக்க முடியாது. எம்.ஜி.ஆர் யாருக்கு என்ன செய்தார் என்பது குறித்து சீமானுக்கு தெரியவில்லை என்றால், அதுகுறித்து நான் புத்தகமாகவே தருகிறேன். உண்மை தெரியாமல் திசைதிருப்பும் வகையில் பேசியது ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்.அதனைத்தொடர்ந்து, சீமானுக்கு அதிமுக மீது அப்படி என்ன கோபம் என்று எங்களுக்கு தெரியவில்லை. அவரது கட்சியைச் சேர்ந்த கல்யாண சுந்தரம் எங்களது கட்சியில் இணைந்துவிட்டார் என்ற கோபத்தில் அப்படி பேசுகிறாரா என்று தோன்றுகிறது.

இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

Exit mobile version