காவி உடையணிந்த வள்ளுவர் படம் தவறுதலாக ஒளிபரப்பப்பட்டது : அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்

தமிழக அரசின் கல்வி தொலைக்காட்சியில் காவி உடையணிந்த திருவள்ளுவர் படம் தவறுதலாக ஒளிபரப்பப்பட்டதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் விளக்கமளித்துள்ளார்.

சென்னை:

கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளிகள் மூடப்பட்டு பள்ளி மாணவர்களுக்கு தேர்ச்சியும் வழங்கப்பட்டது. இந்த கல்வியாண்டு முதல் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு தமிழக அரசின் கல்வி தொலைக்காட்சி வாயிலாக அனைத்து வகுப்பினருக்கும் பாடம் நடத்தப்பட்டு வருகிறது.

இந்தநிலையில், கடந்த சில நாட்களாக தமிழக அரசின் கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட திருவள்ளவர் புகைப்படம் காவி உடையணிந்து காட்சியளித்ததால் பெரும் சர்ச்சைக்கு உள்ளானது.ஏற்கனவே தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்ட திருவள்ளுவர் புகைப்படத்தில் வெள்ளை நிற உடையணிந்து எந்தவொரு மத குறியீடுமின்றி இருந்தது. தற்போது திருவள்ளவர் புகைப்படம் காவி உடையணிந்து காட்சியளித்ததால் கி.வீரமணி, முன்னாள் பள்ளி கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, வைகோ, டிடிவி தினகரன் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

Read more – அடுத்த 5 ஆண்டுகளும் அதிமுக தலைமையில் தான் ஆட்சி : கே.பி.முனுசாமி

இதையடுத்து, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அளித்த பேட்டியில்: தமிழக அரசின் கல்வி தொலைக்காட்சியில் திருவள்ளவர் புகைப்படம் காவி உடையணிந்து ஒளிபரப்பு செய்யப்பட்டத்தில் எந்த உள்நோக்கமும் இல்லை. அது எவ்வாறோ தவறுதலாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்த நிகழ்வு தமிழக அரசின் கவனத்திற்கு வந்தவுடன் உடனடியாக காவி உடை நீக்கப்பட்டுவிட்டது என்று குறிப்பிட்டார்.

Exit mobile version