தமிழகத்தில் வெங்காய விலை உயர்வுக்கு காரணம் என்ன தெரியுமா?அமைச்சர் செல்லூர் ராஜூ விளக்கம்

தமிழகத்தில் வெங்காய விலை உயர்வுக்கு காரணம் என்னவென்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்

மதுரையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:-

காரணம் என்ன?

பீகார் தேர்தலில் வெற்றி பெற்ற நிதிஷ்குமார் மற்றும் பிரதமர் மோடிக்கு வாழ்த்துகள். அ.தி.மு.க.வின் 10 ஆண்டுகால ஆட்சியில் மதுரை நன்றாக வளர்ந்துள்ளது. தி.மு.க. ஆட்சியில் மதுரை மாவட்டத்தில் ரவுடிகள் மட்டுமே வளர்ந்தனர். ஏன் ஸ்டாலினே கூட மதுரைக்கு வரவே பயப்பட்டார்.

பீகாரில் தேர்தல் காரணமாக இங்கே வெங்காயம் கொண்டு வர முடியவில்லை. அதனாலேயே தமிழகத்தில் வெங்காய விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. தி.மு.க. ஆட்சியில் நடத்த முடியாத கூட்டுறவுத்துறைத் தேர்தலை அ.தி.மு.க. ஆட்சியில் 2 முறை நடத்தி முடித்து உள்ளோம்.

வேல் யாத்திரை
தி.மு.க. ஆட்சியில் ரேஷன் பொருட்கள் கடத்தப்பட்டன. அ.தி.மு.க. அரசின் வளர்ச்சித் திட்டங்களை நேரில் பார்த்து ஸ்டாலின் பேச வேண்டும். கொரோனா காலத்தில் பா.ஜ.க. வேல் யாத்திரையை தவிர்த்து இருக்கலாம். அரசியல் காரணம் மற்றும் தேர்தல் நெருங்குவதால் பா.ஜ.க. தலைவர் முருகன் வேல் யாத்திரை நடத்துகிறார். இவ்வாறு அவர் கூறினார்.


Exit mobile version