அரசு பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு ரத்து: அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

அரசு பள்ளி மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

சென்னை:

கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு இறுதி தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டது.அதனை தொடர்ந்து தமிழக அரசு பல்வேறு தளர்வுகளை கொண்டு வந்தாலும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு இதுவரை திறக்கப்படவில்லை.

இந்தநிலையில் அரசு பள்ளிகளுக்கு கல்வியானது தொலைக்காட்சி வழியாகவும்,தனியார் பள்ளிகளில் ஆன்லைன் வழியாகவும் வகுப்பு மற்றும் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றனர்.மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு அரையாண்டு தேர்வு எப்பொழுது என்ற கேள்விக்கு தற்போது பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் விளக்கமளித்துள்ளார்.

Read more-ஆப்கானிஸ்தானில் குண்டு வெடிப்பு :காபூல் துணை கவர்னர் படுகொலை

அதில்,அரசு பள்ளி மற்றும்அரசு உதவிபெறும் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு ரத்து செய்யப்பட்டும்,பாடத்திட்டங்கள் 9ம் வகுப்பு வரை 50 சதவீதமாகவும், 10, 11, 12ம் வகுப்புகளுக்கு 35 சதவீதம் வரையும் குறைக்கப்பட்டுள்ளது என்றார்,மேலும் அவர் வேண்டுமென்றால் தனியார் பள்ளிகள் அரையாண்டு தேர்வை ஆன்லைனில் நடத்திக் கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

Exit mobile version