கொட்டும் மழையிலும் சாலையில் அடிபட்டுக் கிடந்த முதியவருக்கு முதலுதவி அளித்த அமைச்சர்…

சாலையில் அடிபட்டுக் கிடந்த முதியவர் ஒருவருக்கு கொட்டும் மழையிலும் அமைச்சர் விஜயபாஸ்கர் முதலுதவி அளித்த சம்பவம், அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
C. Vijayabaskar

தமிழகத்தின் சுகாதார அமைச்சரான விஜயபாஸ்கர், திருச்சி விமான நிலையத்துக்கு காரில் சென்று கொண்டிருந்தபோது, முதியவர் ஒருவர் விபத்தில் அடிபட்டு சாலையில் கிடப்பதைக் பார்த்துள்ளார். இதனை பார்த்த விஜயபாஸ்கர், உடனடியாக காரில் இருந்து இறங்கிய அமைச்சர் விஜயபாஸ்கர், கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் முதியவருக்கு முதலுதவி அளித்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல், அந்த முதியவரை தனது பாதுகாப்பு வாகனத்திலேயே ஏற்றி மேல் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்த்துள்ளார். அமைச்சர் விஜயபாஸ்கரின் மனித நேயம் மிக்க இந்த செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.

அமைச்சர் விஜயபாஸ்கர் மக்களுக்கு உதவி செய்வது இது முதல் முறை அல்ல. இவர் போகும் வழியில் யாருக்கு அடிப்பட்டுக் கிடந்தாலும், தன்னலம் பாராமல் உதவி வருகிறார். இதில் சிறப்பம்சம் என்னவென்றால், இவர் மனிதர்களுக்கு மட்டுமல்ல, வாயில்லா மிருக ஜீவன்களுக்கும் பல நேரங்களில் உதவி செய்து வருகிறார்.

கடந்த வாரம் திருச்சி – மதுரை சாலையில் காரில் சென்று கொண்டிருந்த போது, கர்ப்பிணி பசு ஒன்று வாகனத்தில் அடிபட்டு உயிருக்கு போராடி கொண்டிருந்தபோது, உடனடியாக காரில் இருந்து இறங்கி பசுவிற்கு முதலுதவி அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுபோல பலருக்கும் அவர் உதவி செய்துள்ளார். அவரின் சேவை தொடர வேண்டும் என மக்கள் அவரை வாழ்த்தி வருகின்றனர்.

இதையும் படியுங்கள் : கொடைக்கானல் மலைப்பாதையில் போக்குவரத்துக்கு தடை…

Exit mobile version