தமிழகத்தில் 2 வது தவணை தடுப்பூசியை எங்கு வேண்டுமானாலும் செலுத்தி கொள்ளலாம் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளொன்றுக்கு 15 ஆயிரத்தை கடந்து வருகிறது. இந்த நிலை தொடர்ந்தால் வட மாநிலங்களை போல தமிழகத்திலும் இட பற்றாக்குறை மற்றும் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக உயிரிழப்புகள் அதிகம் ஏற்பட வாய்ப்புள்ளது.
இந்தநிலையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவிக்கையில், தமிழ்நாட்டில் மொத்தம் 7 லட்சம் கொரோனா தடுப்பூசி ‘டோஸ்’கள் இருப்பு வைக்கப்பட்டு, தினந்தோறும் சராசரியாக 1.15 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. எனவே, தற்போது கையிருப்புகளில் உள்ள தடுப்பூசிகள் இன்னும் 6 நாட்கள் வரை பயன்படுத்தலாம் என்றும், தொடர்ந்து தடுப்பூசி மருந்துகளை வாங்குவதற்கு தமிழக அரசு முயற்சி செய்து வருகிறது என்றார்.
Read more – இந்தியாவிற்கு உதவிக்கரம் நீட்டிய பிரெட்லீ… இந்தியா என் மற்றொரு தாய் வீடு..
மேலும், 2 வது தவணை தடுப்பூசி போடுவதற்கு தடை எதுவும் சொல்லக்கூடாது அவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்ற அடிப்படையில் கோவிஷீல்டு அல்லது கோவேக்சின் எதுவாக இருந்தாலும், எங்கு வேண்டுமானாலும் செலுத்திக்கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளார்.