எதிர்க்கட்சிகளை ஒடுக்க பொதுப்பாதுகாப்பு சட்டத்தை பயன்படுத்தாதீங்க-ஸ்டாலின்

எதிர்க்கட்சிகளை ஒடுக்குவதற்கு பொதுப்பாதுகாப்பு சட்டத்தை பயன்படுத்தக் கூடாது என்று மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

காஷ்மீரில் 370வது சட்டப்பிரிவு நீக்கப்பட்ட பிறகு, அம்மாநிலத்தின் முக்கிய தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், அவர்களுடன் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் தொட்ரபுகொண்டு பேசினார். இதுதொடர்பாக, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுயிருப்பது

காஷ்மீரில், மெகபூபா முப்தி மற்றும் பிற அரசியல் தலைவர்களைத் தொடர்ந்து தடுப்புக் காவலில் வைத்திருப்பதற்கு எனது உறுதியான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஜனநாயகத்தின் குரல்கள் ஒடுக்கப்பட்டும், அவர்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டும் ஓராண்டாகிறது. எதிர்க்கட்சிகளை ஒடுக்குவதற்காக பொதுப் பாதுகாப்புச் சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்துவதை தி.மு.க. எதிர்க்கிறது என்றார்.

Exit mobile version