நீலகிரியில் 6 நாள்களாக வெளுத்து வாங்கும் கனமழை; பல குடும்பங்கள் முகாம்களில் தஞ்சம்!

நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் சுற்றுவட்டார பகுதிகளில் தொடரும் கனமழையால் 130க்கும் மேற்பட்ட குடும்பங்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
நீலகிரியில் 6 நாள்களாக வெளுத்து வாங்கும் கனமழை; 130 குடும் பங்கள் முகாம்களில் தஞ்சம்!

நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து 6 வது நாளாக பெய்து வரும் கனமழையின் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக கூடலூர், பந்தலூர் சுற்றுவட்டார பகுதிகளில் வெளுத்து வாங்கும் கனமழையின் காரணமாக ஆறுகள் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். மேலும் கூடலூரில் மட்டும் அதிகபட்சமாக 35 செமீ மழை பதிவாகியுள்ள நிலையில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் துரிதப்படுத்தியுள்ளது.

போக்குவரத்திற்கு தடை

நீலகரி மாவட்டத்தில் பெய்துவரும் கனமழையினால் உதகை – கூடலூர் சாலையில் அதிக மரங்கள் விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே மக்களின் பாதுகாப்பிற்காக ஊட்டி – கூடலூர் சாலையில் இரவு 7 மணி முதல் மாலை 6 வரை போக்குவரத்திற்கு தடை விதித்து மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.

Exit mobile version