ரயில் பயணிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி – தமிழகத்தில் 9 அல்ல, மேலும் கூடுதல் சிறப்பு ரயில்கள் – ரயில்வே புதிய அறிவிப்பு!!

தமிழகத்தில் ஏற்கெனவே 9 சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் கூடுதலாக 4 சிறப்பு ரயில்களை இயக்க உள்ளதாக, தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

கொரோனா ஊரடங்கு முடிந்து, தமிழகத்தில் வரும் செப்டம்பர் 7-ஆம் தேதி முதல் மாநிலம் முழுவதும் பேருந்துகள் மற்றும் பயணிகள் ரயில் இயக்கப்படுகின்றன. இதனையடுத்து, வரும் 7-ஆம் தேதி முதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக, தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. ஏற்கெனவே 9 சிறப்பு ரயில்கள் இயங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது மேலும் 4 சிறப்பு ரயில் சேவைகளுக்கான அறிவிப்பை, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ளது.

அதன்படி சென்னையிலிருந்து செங்கோட்டை, கன்னியாகுமரி, மேட்டுப்பாளையத்திற்கும் மற்றும் திருச்சி – நாகர்கோவில் இடையேயும் சிறப்பு ரயில் இயக்கப்படுகின்றன. 

அதன்படி, சென்னை எழும்பூர்-செங்கோட்டை இடையே  செப்டம்பர் 10-ஆம் தேதி முதல் வாரம் மூன்று முறையும், சென்னை-கன்னியாகுமரி இடையே 8-ஆம் தேதி முதல் தினமும் சிறப்பு ரயில் இயக்கப்படவிருக்கிறது. மேலும், சென்னை – மேட்டுப்பாளையம் மற்றும் திருச்சி – நாகர்கோவில் இடையே, 7-ஆம் தேதி முதல் தினமும் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது

ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட சிறப்பு ரயில்களுடன், இந்த 4 ரயில்களுக்குமான முன்பதிவு, நாளை காலை 8 மணி முதல் தொடங்குகிறது.

Exit mobile version