சார் பஸ் எப்போ எடுப்பீங்க? பாஸ் நாங்க ரெடியாதான் இருக்கோம்

தமிழக அரசு எப்போது அறிவித்தாலும் அரசு பேருந்துகள் இயக்க தயாராக இருப்பதாக போக்குவரத்து துறை அதிகாரிகள்தெரிவித்தனர்

கொரோனா பரவல் கட்டுக்குள் வராததால் ஜூலை 31 ஆம் தேதிவரை ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டது. சென்னை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் தனியார் மற்றும் அரசு பொது பேருந்து போக்குவரத்து 31 ஆம் தேதி வரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. அரசு அறிவித்திருந்த ஊரடங்கு வரும் 31 ஆம் தேதி உடன் முடிவடைய இருக்கிறது. ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்பது குறித்து 29 ம் தேதி மாவட்ட ஆட்சியர் ஆலோசனை கூட்டம் பின்னரே முதல்வர் அறிவிக்க இருக்கிறார்.

இந்நிலையில் அரசு பேருந்துகள் இயங்குமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது. அரசு எப்போது அறிவித்தாலும் பேருந்துகளை இயக்க தயாராக இருப்பதாக போக்குவரத்து துறைகள் தெரிவிக்கின்றனர்.

 சென்னை மற்றும் வெளியூர் செல்லும் பேருந்துகள் என தமிழகம் முழுவதும் சுமார் 25 ஆயிரம் பேருந்துகளை இயக்க போக்குவரத்துத்துறை தயாராக உள்ளது. அனைத்து பணிமனையிலும் பராமரிப்பு செய்து, கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்து பேருந்துகள் தயாராக உள்ளன.

Exit mobile version