ஜூரத்துக்கு தவறான ஊசி போட்டதால் புதுமாப்பிள்ளை பலி

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே ஜூரம் என்று சென்றவருக்கு தவறான ஊசி போட்டதால் புதுமாப்பிள்ளை பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இராஜபாளையம் அருகே தளவாய்புரம் பகுதியைச் சேர்ந்தவர் முகேஷ். இவருக்கும் தாய்மாமா மகளுக்கும் ஒன்றரை மாதம் முன்பு திருமணம் முடிந்துள்ளது. இந்நிலையில் முகேஷுக்கு காய்ச்சல் மற்றும் இருமல் தொந்தரவு ஏற்பட்டதால் தளவாய்புரம் கூட்டுறவு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது மருத்துவர் ஊசி போட்போது அவருக்கு உடல் முழுவதும் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மருத்துவர் வேறு ஊசி போட்டுள்ளார்.

உடனே உடல் சோர்வு ஏற்பட்டு மகேஷ் மயங்கி கீழே விழுந்துள்ளார். இந்நிலையில் அங்கிருந்து உடனடியாக இராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். சாதாரண காய்ச்சலுக்காக ஊசி போட சென்ற முகேஷ் திடீரென உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவரின் கவனக்குறைவே இதற்கு காரணம் என்றும் முகேஷ்க்கு தவறான ஊசி போட்டிருக்கலாம் என்றும் கூறி உறவினர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

Exit mobile version