பாடத்திட்ட குறைப்பு குறித்த அறிவிப்பு ஐந்து நாட்களுக்குள் வெளியாகும் : அமைச்சர் செங்கோட்டையன்…

பள்ளி மாணவர்களுக்கான பாடத்திட்ட குறைப்பு குறித்த அறிவிப்பு ஐந்து நாட்களுக்குள் வெளியாகும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
Minister Sengottaiyan

ஈரோடு, கோபிச்செட்டி பாளையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது, நான்கைந்து நாட்களுக்குள் பாடத்திட்டக் குறைப்பு குறித்த அறிவிப்பு பள்ளிக் கல்வித்துறையால் வெளியிடப்படும்.

எந்தெந்தப் பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளன என்பது குறித்து திங்கட்கிழமை அன்று முதல்வரிடத்தில் அறிக்கையை ஒப்படைக்க உள்ளோம். அதற்குப் பிறகு எந்த எந்தப் பாடங்கள் இணையம் மூலமாகத் தொலைக்காட்சிகளில் நடத்தப்படும் என்று முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

மேலும், அரையாண்டு தேர்வுகள் ஆன்லைனில் நடத்தப்படும் என்ற தகவல் தவறானது. இதுபோன்ற பொய்யான தகவல்களை பெற்றோர்களும், மாணவர்களும் நம்ப வேண்டாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version