மடிந்து போன மனிதநேயம்!!!

 கொரோனா தொற்றால் உயிரிழந்த செவிலியர் அர்ச்சனாவின் சடலத்தை அடக்கம் செய்ய நவல்பூர் கிராம மக்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து பிரச்சினையில் ஈடுபட்டார்கள்

இதன் காரணமாக சுமார் 2 மணி நேரத்துக்கும்  மேல்கல்லறையில் செவிலியர்சடலத்துடன் உறவினர்கள் போராடி வந்த நிலையில், கடைசியில் அவரது சடலம் அதே கல்லறையில் நல்லடக்கம் செய்யப்பட்டது. 

ராணிப்பேட்டை நவல்பூர் பகுதியைசேர்ந்தவர் அர்ச்சனா.. இவர் ஆற்காடு அரசு  மருத்துவமனையில்செவிலியராக பணிபுரிந்து வருகிறார் இந்நிலையில் அர்ச்சனாவுக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டது.

எனவே அவருக்கு கொரோனா  தோற்று பரிசோதனைசெய்து பார்த்ததில், தொற்று  இருப்பது உறுதியானது.  உடனே அவரை சிகிச்சைக்காகவேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில்  அனுமதித்தார்கள். ஆனால், அங்கு தீவிர சிகிச்சை கொடுத்துள்ள நிலையில் அர்ச்சனா சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். இதையடுத்து அவரது சொந்த ஊரான நவல்பூரில் உள்ளகல்லறையில் அர்ச்சனாவை புதைப்பதற்கு அவரது குடும்பத்தினர் பாடுகளை செய்திருந்தனர் 

அதற்காக சடலத்தையும் கல்லறை தோட்ட பகுதிக்கு கொண்டு வந்தனர்.. ஆனால் கொரோனா தொற்றால் உயிரிழந்த நர்ஸ் உடலை புதைக்க அப்பகுதி கிராம மக்கள்  கூட்டாக எதிர்ப்பு தெரிவித்து தகராறு செய்ய ஆரம்பித்தனர். 

இந்த தகவலறிந்து போலீசார் விரைந்து வந்து தகராறுசெய்தவர்களிடம்பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இதனால் சுமார் 2 மணி நேரமாக நர்ஸ் சடலத்தை அதே இடத்தில் வைத்து கொண்டு உறவினர்கள் தவித்த கொடுமை அரங்கேறியது இறுதியில், கிராம மக்களை போலீசார் சமாதானம் செய்தனர்.. 

அதன் பிறகே சடலம் அதே கல்லறையில் நல்லடக்கம் செய்யப்பட்டது. 

ஏற்கனவே இதுபோல் அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்த சம்பவம்   இதற்கு முன்னர் சென்னையில் ஒரு டாக்டருக்குஅரங்கேறியுள்ளது பிறகு, கோர்ட் வரை இந்த விஷயம் சென்றது,.

 “இறந்து போனவர்களின்சடலத்தில் இருந்து, எந்தவொரு நோய் பரவல் குறித்தும், மக்கள் கவலைப்படவோ, பயப்படவோ தேவையில்லை. நாங்கள், அதை பாதுகாப்பான முறையில் கையாள்கிறோம்.

இந்த விஷயத்தில், நம் சமூகத்திற்கான, முழு பாதுகாப்பை, உங்களுக்கு உறுதி அளிக்கிறோம். என்று அரசு சார்பில் பல ஆரணங்கள் கூறப்பட்டிருந்தாலும்  பொதுமக்களுக்குதொற்று அச்சம் போகவே இல்லை.. இதனால் மனித நேயமும் மங்கி கொண்டு வருவது மட்டுமில்லாமல் இறந்தவர்களின் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் மிகுந்த மன உளைச்சலைஅளிப்பதாக உள்ளது.. எனவே இது சம்பந்தமான விழிப்புணர்வு நடவடிக்கை உடனடி தேவையாக உள்ளதால் தமிழக அரசு தலையிட்டு  இனிமேல் இதுபோன்ற பிரச்சினைகள் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

Exit mobile version