அட டைனோசர் முட்டையா இது… பெரம்பலூரில் மக்கள் ஆச்சரியம்!!!

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பெரிய ஏரியில் 12 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய டைனோசர்களின் முட்டை போல் பெரிய உருண்டை வடிவிலான படிமங்கள் கிடைத்துள்ளன.

பெரம்பலூர் அருகே குன்னம் பெரிய ஏரியில் பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனோசர்களின் முட்டை போல் நூற்றுக்கும் மேற்பட்ட பெரிய உருண்டை வடிவிலான படிமங்களும், ஏராளமான கடல்வாழ் உயிரினங்களின் படிமங்களும் சிதைவுற்ற நிலையில் கிடைத்துள்ளது.

அந்தக் கடல்வாழ் நத்தைகளின் படிமங்களும், உருண்டை வடிவிலான படிமங்களும், வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

இந்த டைனோசர் முட்டைகள் மாமிச கார்னோட்டாரஸ் (Carnotaurus) மற்றும் இலைகள் மட்டும் உண்ணும் சைவ சவுரபோட் டைனோசரின் முட்டைகளாக இருக்கலாம் எனவும், இது சுமார் 12 கோடி முதல் 14 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தை சேர்ந்த டைனோசர் முட்டைகளாக இருக்கலாம் எனவும் தொல்லியல் துறை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த வகை டைனோசர்கள் தென் அமெரிக்க கண்டத்தை சேர்ந்தவையாக இருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version