இனி குளு, குளுவென பேருந்து பயணம் செய்யலாம்!!!

தமிழகத்தில் ஏ.சி.பேருந்துகள் இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 65 வயதுக்கு மேற்பட்டோர் ஏ.சி பேருந்துகளில் அனுமதிக்கக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.  

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் 25 ஆம் தேதி முதல் பேருந்துகள் இயக்க தடை விதிக்கப்பட்டது. கொரோனா பரவல் படிப்படியாக கட்டுக்குள் வந்ததையடுத்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் பேருந்துகள் இயக்க அனுமதி வழங்கப்பட்டது. அதே நேரத்தில் ஏ.சி. பேருந்துகளில் ஏ.சி.பயன்படுத்த தடை நீட்டிக்கப்பட்டது. தமிழக அரசு போக்குவரத்து துறையின் கீழ் இயக்கப்படும் 702  ஏ.சி.பேருந்துகள் இயக்கப்படாமல் இருப்பதால் வருவாய் பாதிக்கபடுவதாகவும், கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துள்ளதையடுத்து ஏசி.பேருந்துகள் இயக்க அனுமதிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு போக்குவரத்து துறைதுறை கோரிக்கை விடுத்தது.

இதனை பரிசீலித்து ஏசி பேருந்துகளை இயக்க அனுமதி அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதன் மூலம் ஏசி வசதி உள்ள தமிழக அரசு பேருந்துகள், தனியார் பேருந்துகள் இன்று முதல் இயங்க அனுமதிக்கப்படுகிறது.  பேருந்து இயக்குவது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறையில் , 24 டிகிரி முதல் 30 டிகிரி செல்சியஸ் வரை ஏசி பயன்படுத்தலாம், சளி, இருமல் காய்ச்சல் உள்ளவர்கள், 65 வயதுக்கு மேற்பட்டோர் ஏசி பேருந்துகளில் அனுமதிக்கக்கூடாது. பயணிகள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும், ஒவ்வொரு டிரிப்புக்கும் ஒருமுறை பேருந்தை கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version