சென்னையில் தனியார் கோவிட் சென்டர்கள் தொடங்க அனுமதி – மாநகராட்சி ஆணையர்

சென்னையில் தனியார் கோவிட் சென்டர்கள் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்திலும் நாளொன்றுக்கு 10 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் இந்த கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலைமை தொடருமானால் வாட மாநிலங்களை போலவே தமிழகத்திலும் இட பற்றாக்குறை சூழல் ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும், சென்னையில் தினமும் 2 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.

இந்தநிலையில், சென்னை மாநகராட்சி சார்பில் 12 கொரோனா சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்ற நிலையில், சென்னை தரமணியில் உள்ள சென்னை பல்கலைக்கழக மாணவர் விடுதியில் தயாராகி வரும் கோவிட் கேர் மையத்தை சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் பார்வையிட்டார்.

Read more – 10 வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு என்பது தவறான தகவல் : பள்ளி கல்வித்துறை அறிவிப்பு

அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், சென்னை மாநகராட்சி சார்பில் 12 கொரோனா சிகிச்சை மையங்கள் இருந்து வரும் நிலையில் கோவிட் கேர் சென்டர் தொடங்க தனியார் ஹோட்டல், மருத்துவமனை, அசோசியேஷன் உள்ளிட்டவை அனுமதி பெறலாம் என்றும், அதற்காக மாநகராட்சியிடம் முறைப்படி அனுமதி பெற்று அமைத்துக்கொள்ளலாம் என்று தெரிவித்தார்.

Exit mobile version