அட கை தட்டுங்களேன்.. பாவம் அண்ணன் சீனிவாசன் மட்டும் தட்டுறாரு.. கைதட்டலை கேட்டு வாங்கிய ஓபிஎஸ்

தமிழக அரசின் பட்ஜெட்டை ஓ.பன்னீர் செல்வம் வாசிக்கும் போது கைதட்டலை கேட்டு வாங்கிக்கொண்டார்.

சென்னை :

தமிழக சட்டப்பேரவையின் பதவிக்காலம் வரும் மே மாதம் 24 ம் தேதியுடன் முடிவடையும் நிலையில் இன்று எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு 2021-22 நிதியாண்டின் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் அறிக்கையை தமிழக துணை முதல்வர் மற்றும் நிதியமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்து வருகிறார்.

இந்தநிலையில், சுற்றுச்சூழல் மாசினால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்கும் நோக்கத்துடன் மரம் நடும் திட்டத்தை 2011-2012 ம் ஆண்டில் இருந்து வனத்துறை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் அரசின் நிலங்கள், தனியார் நிலங்கள் மற்றும் தரம் குன்றிய வனப்பகுதிகளில் நடப்பாண்டில் நடப்பட்டு வரும் 72 லட்சம் மரக்கன்றுகள் உட்பட 6.12 கோடி மரக்கன்றுகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன என்று துணை முதல்வர் படித்து கொண்டு இருந்தார்.

Read more – வீடு இல்லாதவர்களுக்கு 2 சென்ட் நிலமுடன் வீடு கட்டித்தரப்படும் : முதல்வரின் அடுத்த அதிரடி அறிவிப்பு

இதை கேட்டு உற்சாகமடைந்த வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஒரு ஆர்வத்தில் அவர் மட்டும் கைதட்டி விட்டார். அப்பொழுது பன்னீர் செல்வம் பட்ஜெட் வாசிப்பதை நிறுத்திவிட்டு அனைவரிடமும் கை தட்டுங்களேன்.. பாவம் அண்ணன் சீனிவாசன் மட்டும் தட்டுறாரு என சொல்லிவிட்டு சிரித்தார். இதனால் அனைவரும் கைதட்டி மேலும் உற்சாகப்படுத்த தொடர்ந்து அட்ஜெட் தாக்கல் வாசிக்கப்பட்டு வருகிறது.

Exit mobile version