இன்டர்நெட் பேங்கிங் வைத்திருக்கும் நபர்கள் அனைவரும் பேஸ்புக் கணக்கில் இருக்கும் பிறந்த தேதி மற்றும் மொபைல் நம்பரை பாதுகாப்பு கருதி நீக்கி விடும்படி நெல்லை மாவட்ட போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
இணையதள வசதி கொண்ட வங்கி கணக்கை ஹேக்கர்கள் எப்படி ஹேக்கிங் செய்கிறார்கள் என்பது பற்றி நெல்லை போலீசாரின் பேஸ்புக் பக்கத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதில் குறிப்பிடப்பட்டு இருப்பதாவது: முதலில் ஹேக்கர்ஸ் உங்கள் பெயர் மற்றும் பிறந்த தேதியை பேஸ்புக் கணக்கிலிருந்து பெற்றுக் கொள்வார்கள்.
இந்தத் தகவலை வைத்துக்கொண்டு அவர்கள் வருமான வரித்துறை இணையதள முகவரிக்கு சென்று புதுப்பிப்பதன் மூலமாக உங்கள் அலைபேசி எண் மற்றும் பான் கார்டு நம்பரை பெற்று கொள்வார்கள்.
இதன்மூலம் அவர்களுக்கு பான் கார்டு நகல் கிடைத்துவிடும்.
அதன் பின்பு அவர்கள் காவல் நிலையத்தில் மொபைல் திருட்டு போய்விட்டதாக புகார் பதிவு செய்வார்கள்.
பின்பு பான் கார்டு மூலம் அதே எண்ணிற்கான மற்றொரு சிம் கார்டை மொபைல் கம்பெனியில் இருந்து பெற்றுக் கொள்வார்கள்.
அவர்கள் பெற்ற சிம்கார்டு மூலமாக இன்டர்நெட் பாங்கிங் வாயிலாக தற்போது அவர்களுக்கு உங்கள் பேங்க் அக்கவுன்டை அணுகுவதற்கு வசதியாக இருக்கும்.
பின்பு பேங்க் அக்கவுண்ட் இணைய முகவரிக்கு சென்று “Forgot my Password ” தேர்வினை கிளிக் செய்வார்கள்.
பின்பு எளிதாக பின்கோடு மற்றும் அனைத்து தரவுகளும் அவர்களிடம் இருக்கும் மொபைல் எண்ணிற்கு வந்து சேரும். அதனால் உங்களின் வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை அவர்கள் எடுத்துக்கொள்வார்கள்.இந்தத் தகவலை சைபர் செல் போலீசார் வெளியிட்டுள்ளனர்.
இன்டர்நெட் பேங்கிங் வைத்திருக்கும் நபர்கள் அனைவரும் ஃபேஸ்புக் கணக்கில் இருக்கும் பிறந்த தேதி மற்றும் மொபைல் நம்பரை தங்கள் பாதுகாப்பிற்காக நீக்கி விடும்படி நெல்லை மாவட்ட போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.