படிக்கட்டில் நின்றதை கண்டித்த கண்டக்டர் : ஆத்திரத்தில் பஸ் கண்ணாடியை உடைத்த மாணவர்கள்

படிக்கட்டில் நின்று பயணம் செய்த கல்லூரி மாணவர்களை கண்டக்டர் கண்டித்ததால் பேருந்து கண்ணாடியை கல்லால் அடித்து உடைத்த 2 மாணவர்களை விசாரித்து வருகின்றனர்.

சென்னை:

சென்னை வள்ளலார் நகரிலிருந்து திருவேற்காடு நோக்கி அரசு பேருந்து இயங்கிக்கொண்டிருந்த போது கல்லூரி மாணவர்கள் 2 பேர் அந்த பேருந்து படிக்கட்டில் நின்றபடி பயணம் செய்து வந்துள்ளனர். இதையடுத்து, அந்த இருவரையும் கண்டித்த கண்டக்டர் ஜான்போஸ்கோ, படிக்கட்டில் நிற்காமல் இருவரையும் உள்ளே ஏறி வரும்படி கூறினார்.

Read more – அமெரிக்க அதிபர் தேர்தல் வெற்றி : ஜோ பைடன், கமலா ஹாரிஸ் பதவி ஏற்பு விழாவில் தமிழர்களின் பாரம்பரிய கோலங்களுக்கு இடம்

இதில் ஆத்திரம் அடைந்த 2 மாணவர்களும் கண்டக்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மதுரவாயல் பேருந்து நிறுத்தம் அருகே வந்தபோது பேருந்தில் இருந்து இறங்கி கீழே கிடந்த கல்லால் பேருந்தின் கண்ணாடியை உடைத்து தப்பி ஓடிவிட்டனர்.

இதையடுத்து, பஸ் கண்டக்டர் ஜான்போஸ்கோ அளித்த புகாரின்பேரில் மதுரவாயல் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Exit mobile version