மாங்காடு அருகே நாயின் கால்களை உடைத்து கொடூரமாக கொலை செய்த 3 பேரை போலீசார் தேடிவருகின்றனர்.
சென்னை:
சென்னை மாங்காடு அடுத்த கெருகம்பாக்கத்தை சேர்ந்தவர் சத்யராஜ் (30).இவர் தினசரி தெரு நாய்களுக்கு உணவு வைப்பது வழக்கமாக கொண்டுள்ளார்.இதேபோல், நேற்று முன்தினம் அனைத்து நாய்களுக்கும் உணவு வைத்தபோது, எப்பொழுதும் ஒரு நாய் மட்டும் அங்கு வரவில்லை.
அந்த குட்டி நாயை சத்யராஜ் தேடி பார்த்தபோது அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்திற்குள் 2 கால்கள் உடைக்கப்பட்டு, முகத்தில் ரத்தம் காயங்களுடன் உயிருக்கு போராடியுள்ளது. இதுபற்றி விசாரித்தபோது, அந்த தனியார் நிறுவனத்திற்குள் நாய் நுழைந்ததால் அங்கிருந்த ராஜேஷ், கீர்த்தி மற்றும் ரஞ்சித் ஆகியோர் இரும்பு ராடால் அடித்து கால்கள் இரண்டையும் உடைத்துள்ளனர்.
Read more – காவல்துறை தலைமை அலுவலகம் அருகில் பெண்ணுக்கு நடந்த கொடுமை : பொதுமக்களிடையே அதிர்ச்சி
படுகாயமடைந்த அந்த குட்டி நாயை சத்யராஜ் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், சிகிச்சை பலனின்றி நாய் பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இதையடுத்து நாயை அடித்து கொன்ற 3 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சத்யராஜ் மாங்காடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அந்த 3 நபரை தற்போது தேடி வருகின்றனர்.