தமிழகத்தில் ‘அரைமணிநேரத்தில் இ-பாஸ் ரெடி’ விளம்பரம் செய்த இளைஞர்களை போலீசார் என்ன செய்தார்கள் தெரியுமா?

ஊரடங்கினால் இ-பாஸ் நடைமுறை கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் அரை மணி நேரத்தில் இ-பாஸ் கிடைக்கும் என விளம்பரம் செய்த கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.
தமிழகத்தில் 'அரைமணிநேரத்தில் இ-பாஸ் ரெடி' விளம்பரம் செய்த இளைஞர்களை போலீசார் என்ன செய்தார்கள் தெரியுமா?

கொரோனா தொற்றின் வேகம் அதிகரிக்க தொடங்கிய காலக்கட்டத்தில் இருந்தே வெளி மாநிலம் மற்றும் தமிழகத்திற்குள்ளேயே எந்த மாவட்டத்திற்குள் செல்ல வேண்டும் என்றாலும் இ-பாஸ் அனுமதியினை பெற்றுதான் செல்ல வேண்டும் என்பது கடந்த மார்ச் மாதம் முதல் கட்டாயமாக்கப்பட்டது. இத்தகைய நடைமுறை தற்போது 6 ஆம் கட்ட ஊரடங்கான ஆகஸ்ட் 31 வரை நீடிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே சென்னை போன்ற பெரு நகரங்களின் வசித்து வந்த மக்கள் கொரோனா அச்சத்தின் காரணமாக எப்படியாவது இ-பாஸினை எடுத்துவிட்டு சொந்த ஊர்களுக்கு செல்ல வேண்டும் என முயற்சித்துவந்தனர். ஆனால் உரிய விபரங்களை அளித்தால் மட்டுமே இ-பாஸ் அனைவருக்கும் வழங்கப்பட்டது. ஆனால் விதிமுறை மீறி செல்ல வேண்டும் என்பதற்காக பலர் முயற்சி செய்த போது அவர்களுக்கு தமிழக தலைமை செயலர் அலுவலகத்தில் பணிபுரியும் பணியாளர்களும் உதவிபுரிந்து வந்த நிலையில் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

2 மணி நேரத்தில் இ-பாஸ் கிடைக்கும் என விளம்பரம் செய்து கைதான வேலூர் ஜெகதீஸ்

அதனையடுத்து கடுமையான கட்டுப்பாடுகளை இ-பாஸ் வழங்குவதற்கு விதிக்கப்பட்டது. ஆனால் அதனை எல்லாம் சிறிதும் மதிக்காத இளைஞர்கள் பலர் ரூ.1500 கொடுங்கள் உங்களுக்கு எந்த மாவட்டத்துக்கும், எந்த மாநிலத்துக்கும் செல்வதற்கு 2 மணி நேரத்தில் இ-பாஸ் வாங்கித்தரப்படும் என முகநூல் மற்றும் வாட்சப் வழியே விளம்பரங்கள் வழியே தெரிவித்துள்ளார். இதுக்குறித்து விசாரிக்கையில் இந்த இளைஞர் வேலூரை சேர்ந்த ஜெகதீஸ்குமார் என்பது தெரியவந்ததையடுத்து, அவரும் அவரது திருப்பூரைச் சேர்ந்த வடிவேல் என்பவரையும் காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் ஒரு இ-பாஸ்க்கு ரூ.2500 வரை வாங்கியது அம்பலமாகியுள்ளது.

அரைமணிநேரத்தில் இ-பாஸ் கிடைக்கும் என ஆடியோ மெசேஜ்

வேலூரை அடுத்து கடலூரிலும் முறைகேடாக இ-பாஸினை வழங்கும் கும்பலும் போலீசாரிடம் சிக்கி கொண்டது. கடலூர் சாவடியை சேர்ந்த ராஜராமன் நான் இதுவரை 50 ஆயிரம் இ-பாஸ்களை வாங்கிகொடுத்திருக்கேன்,அதுவும் அரைமணிநேரத்துல உங்களுக்கு கிடைத்தும் என தெரிந்தவர்களை ஆடியோ மெசேஜ் மூலம் தகவல்களை பரப்பிவந்த நிலையில் அவரையும் போலீசார் கைது செய்தனர்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்ததான் இ-பாஸ் நடைமுறை கட்டாயமாக்கப்பட்டது. ஆனால் இதனையும் முறைகேடாக பலர் வழங்கிவருவதால் தமிழகம் முழுவதும் வேறு யாரேனும் இதுப்போன்ற மோசடிகளில் ஈடுபடுகிறார்களா? என அதிரடி விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையினை சமூக ஆர்வலர்கள் முன்வைத்து வருகின்றனர்.

Exit mobile version