தாம்பரத்தில் மது போதையில் கஞ்சா தர மறுத்த நண்பரை விரட்டி, விரட்டி கத்தியால் குத்திய நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தாம்பரம் அடுத்த முடிச்சூர் பகுதியை சேர்ந்தவர்கள் ரவி மற்றும் ராஜேஷ். சிறந்த நண்பர்களான இவர்கள் வழக்கம் போல் மது அருந்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தான் போதை தலைக்கு ஏற தாம் என்ன செய்கிறோம் என தெரியாமல் இருந்த நிலையில் நண்பரை கொலை செய்துள்ளார் ராஜேஷ்.
மதுப்போதையில் இருந்த ரவியிடம் கஞ்சாவினை கேட்ட போது அதனை தர மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ராஜேஸ் ரவியினை ஒட ஓட விரட்டி கத்தியால் கை, கழுத்து ஆகிய பகுதிகளில் குத்திக்கொலை செய்துள்ளார். போதைக்காக நண்பரை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.