மாணவர்களுக்கு ஆதரவாக அதிமுக செயற்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 15 தீர்மானங்கள்

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் இன்று காலை நடைபெற்றது. இதில் நீட் தேர்வு ரத்து இரு மொழிக் கொள்கை என மாணவர்களுக்கு ஆதரவாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பரபரப்பான சூழ்நிலையில் இன்று காலை அதிமுக செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு,

காவேரி டெல்டா மண்டலத்தை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. மொழித் திணிப்பை அதிமுக எதிர்க்கிறது, தமிழகத்தில் இருமொழிக்கொள்கை என்னும் கருத்தில் அதிமுக உறுதியாக உள்ளது. கொரோனாக் காலத்தில் அயராது உழைத்த முதல்வர் மற்றும் துணை முதல்வரை பாராட்டியும், ஜிஎஸ்டி நிலுவைத் தொகை மற்றும் இதர திட்டங்களின் மானிய நிலுவைத் தொகையை மத்திய அரசு உடனடியாக வழங்க வலியுறுத்தியும், தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% ஒதுக்கீடு மற்றும், கல்வியை வணிகமயமாக்கும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கொரோனா தடுப்புப் பணிகளுக்கு மத்திய அரசு கூடுதல் நிதி வழங்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுளள்து.

தேர்தல் ஆணையத்தின் விதிப்படி காட்சிகள் ஆண்டுதோறும் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தை கூட்ட வேண்டும். இதன்படி இந்த ஆண்டிற்கான அதிமுக செயற்குழு கூட்டம் கூட்டப்பட்டது. இதில் பங்கேற்க சுமார் 300 பேர்க்கு அழைப்பு வழங்கப்பட்டது. இதில் பங்கேற்க வருபவர்கள் அழைப்பிதழுடன் கொரோனா தொற்று இல்லை என்ற மருத்துவ அறிக்கையுடன் வர வேண்டும். இதனால், செயற்குழு உறுப்பினா்கள் கொரோனா பரிசோதனையை மேற்கொண்டனா். அதில், பேரவை துணைத் தலைவா் பொள்ளாச்சி வி.ஜெயராமன், முன்னாள் அமைச்சா் பரஞ்ஜோதி உள்ளிட்ட சில நிா்வாகிகளுக்கு நோய்த்தொற்று இருப்பது தெரிய வந்ததையடுத்து, அவா்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

Exit mobile version