சென்னை போக்சோ வழக்கில் சாகும்வரை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு!!

சென்னை பெருநகர காவல் துறையின் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றத்தடுப்பு பிரிவினர் (CAWC) கடந்த 2018ம் ஆண்டு W6 அயனாவரம் AWPS எல்லைக்குட்பட்ட பகுதியில் சிறுமியை பலாத்காரம் செய்தது தொடர்பாக பதிவு செய்யப்பட்ட போக்சோ வழக்கில் எதிரிகள் 16 பேரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பினர்.

இவ்வழக்கில் நீதிமன்ற விசாரணை முடிக்கப்பட்டு, முதல் குற்றவாளி (A1) க்கு சாகும் வரை ஆயுள் தண்டனையும் (2 Counts), A2, A5 & A11 ஆகிய 3 குற்றவாளிகளுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனையும், A4 குற்றவாளிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், A6, A7, A8, A9, A12, A13, A14, A16, A17 ஆகிய குற்றவாளிகளுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் வழங்கப்பட்டது.

இவ்வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இடைக்கால இழப்பீடு தொகையான ரூ.1,50,000/-ற்கான காசோலையை நீதிமன்ற உத்தரவின்பேரில் இன்று (01.9.2020), சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு. மகேஷ்குமார் அகர்வால், இ.கா.ப., அவர்கள் பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோரிடம் வழங்கினார். இவ்வழக்கினை சிறப்பாக புலன் விசாரணை செய்த காவல் அதிகாரிகள் மற்றும் ஆளினர்களை காவல் ஆணையாளர் அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.

Exit mobile version