வரும் தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் தேமுதிக கட்சி இடம்பெறும் கூட்டணியே அமோக வெற்றிபெறும் என்று அந்தக் கட்சியின் பொருளாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.

தே.மு.தி.க நிறுவனர் விஜயகாந்தின் மனைவி, கட்சியின் பொருளாளர் என்ற அடிப்படையில் தற்போது கட்சியை நடத்தி வருகிறார். அடிக்கடி ஆலோசனைக் கூட்டங்களையும், தொண்டர் செயல்வீரர்கள் கூட்டத்தையும் அவர் அரங்கேற்றி வருகிறார்.
இந்நிலையில் நேற்று அவர் கூறும்போது, “‘வரும் தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் தேமுதிக இடம்பெறும் கூட்டணியே வெற்றிபெறும். இதில் யாருக்கும் எந்த சந்தேகமும் வேண்டாம்.
திமுக கூட்டணியிலும் கருத்து வேறுபாடு, முரண்பாடுகள் இருக்கத்தான் செய்கிறது. தேர்தல் நேரத்தில்தான் கூட்டணி குறித்து இறுதி செய்யப்படும். அதிமுக ஆட்சியை நிறையும் குறையும் கலந்த ஆட்சியாக தேமுதிக பார்க்கிறது” என்றார்.