தனியார் பள்ளிகள் கட்டணம் வசூலிக்கக் கூடாது – மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனரகம்

தமிழகத்தில் தனியார் பள்ளிகள் நாளை வரை கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்குநரகம் திடீர் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஊரடங்கு காரணமாக, தொழில்கள், வேலை வாய்ப்பு முடங்கியுள்ள நிலையில், கட்டணத்தை கட்டியே ஆக வேண்டும் என்பதில் தனியார் பள்ளிகள் உறுதியாக இருந்து வருகின்றன. கட்டணம் செலுத்த முடியாத பிள்ளைகளை பள்ளியில் இருந்து நீக்கும் பணிகள் நடந்து வருகிறது.

இந்த நிலையில் தமிழக மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்குநரகம் பள்ளிகளுக்கு உத்தரவு ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், “பள்ளி கட்டணம் தொடர்பாக நீதிமன்றத்தில் தமிழக அரசு தன்னுடைய முடிவை தெரிவிக்கும் வரையில் தனியார் பள்ளிகள் காத்திருக்க வேண்டும். நாளை வரை எந்தவிதமான கட்டணத்தையும் பள்ளிகள் வசூலிக்கக் கூடாது” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Exit mobile version