மாசு கட்டுப்பாடு வாரிய தலைவர் வெங்கடாசலத்தின் அலுவலகம் மற்றும் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
ஒய்வு பெற்ற வனத்துறை அதிகாரியான வெங்கடாசலம் 2019ம் ஆண்டிலிருந்து மாசு கட்டுப்பாடு வாரிய தலைவராக பதவி வகித்து வருகிறார். தற்போது பதவியில் இருந்து வரும் அவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார்கள் எழுந்தது. அதனடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை கிண்டியிலுள்ள அலுவலகம் மற்றும் வேளச்சேரியிலுள்ள வீட்டில் 10க்கும் மேற்பட்ட வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். என்ன மாதிரியான முறைகேடுகளில் எல்லாம் ஈடுபட்டார் என வெங்கடாசலத்திடம் விசாரணை நடைபெற்று வருவதாகவும், முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இன்றுடன் பதவிக் காலம் முடியும் நிலையில் லஞ்ச ஒழிப்பு துறை வழக்கு பதிவு செய்து சோதனை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
