சமூக வலைதளங்களில் பரவும் கடிதம் என்னுடையதா? நடிகர் ரஜினிகாந்த் விளக்கம்

சமூக வலைதளங்களில் பரவும் கடிதம் தான் எழுதியதா? என்று நடிகர் ரஜினிகாந்த் விளக்கம் அளித்துள்ளார்.
Actor Rajinikanth

நடிகர் ரஜினிகாந்த் அரசியலில் ஈடுபட போவதாக கடந்த 2018-ஆம் ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதி அறிவித்தார். ஆனால், மூன்று ஆண்டுகள் கடந்தும் இதுவரை அவர் அரசியல் கட்சி தொடங்கவில்லை.

அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ரஜினிகாந்த் அரசியலில் ஈடுபட போவதில்லை என்று கடந்த சில தினங்களாக சமூகவலைதளங்களில் ரஜினிகாந்த் எழுதியதாக கடிதம் ஒன்று பரவியது. இது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, என் அறிக்கை போல ஒரு கடிதம் சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் தீவிரமாகப் பரவிக் கொண்டு வருகிறது. அது என்னுடைய அறிக்கை அல்ல என்பது அனைவருக்கும் தெரியும். இருப்பினும் அதில் வந்திருக்கும் என் உடல்நிலை மற்றும் எனக்கு மருத்துவர்கள் அளித்த அறிவுரைகள் குறித்த தகவல்கள் அனைத்தும் உண்மை. இதைப் பற்றி தகுந்த நேரத்தில் என் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளோடு கலந்தாலோசித்து, எனது அரசியல் நிலைப்பாட்டைப் பற்றி மக்களுக்குத் தெரிவிப்பேன். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Exit mobile version