தமிழக அரசின் 47- வது தலைமைச் செயலாளராக ராஜிவ் ரஞ்சன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அரசின் ஆலோசகராக சண்முகம் நியமிக்கப்பட்டார்.
தலைமைச் செயலாளராக இருந்த சண்முகம் ஓய்வுபெற்றார். இதையடுத்து ராஜிவ் ரஞ்சன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த ராஜிவ்ரஞ்சன் 1985 ஆம் ஆண்டு இந்திய ஆட்சிப் பணியில் சேர்ந்தார். . துணை ஆட்சியராக பணியை தொடங்கிய ராஜிவ் ரஞ்சன் மாநில மற்றும் மத்திய அரசுகளில் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார். 1995 முதல் 1997 வரை திருச்சி மாவட்ட ஆட்சியராக பணியாற்றியுள்ளார் ராஜிவ் ரஞ்சன். தமிழக அரசின் நிதி மற்றும் தொழில்துறையில் இணை செயலாளராகவும், பின்னர் தொழில்துறையின் முதன்மைச் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.
தமிழக அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, நெடுஞ்சாலைத்துறையின் முதன்மைச் செயலாளராகவும் பின்னர் கூடுதல் தலைமைச் செயலாளராகவும் ராஜிவ் ரஞ்சன் பணியாற்றியுள்ளார். பின்னர் மத்திய அரசு பணிக்கு மாற்றப்பட்ட ராஜிவ் ரஞ்சன் 2018 முதல் 2020 வரை சரக்கு மற்றும் சேவை வரிகள் துறையின் சிறப்பு செயலாளராக பணியாற்றினார். மத்திய அரசின் மீன்வளம், பால்வளம் மற்றும் கால்நடைத்துறையின் செயலாளராக பணியாற்றி வந்த நிலையில் தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று ஜனவரி 27 ஆம் தேதி தமிழக அரசு பணிக்கு மாற்றப்பட்டார்.