தலையில் மொட்டை.. நெத்தியில் பட்டை.. சசிகலா விடுதலைக்காக நேற்றிக்கடனை நிறைவேற்றினாரா ஆர்.பி.உதயகுமார் ?

பழனி முருகன் கோவிலில் முடி காணிக்கை செலுத்தி ஆர்.பி.உதயகுமார் நேற்றிக்கடனை நிறைவேற்றினார்.

திண்டுக்கல் :

தமிழகத்தில் இன்னும் 3 மாதங்களில் சட்டசபை தேர்தல் வர உள்ளநிலையில் தமிழகத்தில் ஆட்சி அமைக்க அனைத்து அரசியல் கட்சியினரும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரம் சிறையில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா கடந்த 27 ம் தேதி விடுதலை ஆனார்.

இந்நிலையில், சசிகலாவின் விடுதலையால் தமிழக சட்டமன்ற தேர்தலில் மாற்றம் ஏற்படும் என்று மக்கள் எதிர்பார்த்துக்கொண்டு இருக்கின்றனர். தற்போது, பழனி முருகன் கோவிலில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் முடி காணிக்கை செலுத்தினார். அவரிடம் சசிகலா வருகையால் அதிமுகவில் பிளவு ஏற்படுமா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் சொல்லாமல் சிரித்தபடியே சென்றார்.

Read more – ஓய்வெடுக்கும் சின்னம்மா.. சீக்கிரம் டாஸ்மாக் பக்கம் வாங்கம்மா.. நடிகை கஸ்தூரியின் நக்கல் ட்வீட்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த போது தற்காலிக முதல்வராக இருந்த ஓபிஎஸ் பதவி விலகினார். அப்பொழுது சசிகலா முதல்வராக வேண்டும் என்று முதலில் குரல் கொடுத்தவர் ஆர்.பி.உதயகுமார் தான். எனவே சசிகலா விடுதலைக்காக தான் ஆர்.பி.உதயகுமார் பழனி முருகன் கோவிலில் காணிக்கையை நிறைவேற்றினார் என்ற பேச்சும் அடிபடுகிறது.

Exit mobile version