சுடச் சுட மோடி இட்லி !!!

பா ஜா க பிரச்சார செல் மாநில துணைத் தலைவரான மகேஷின் புதுமையான சிந்தனையால் உருவாகியிருக்கிறது இந்த ‘மோடி இட்லி’.

தமிழகத்தில் அடுத்த ஆண்டு தேர்தல் நடக்கவுள்ள நிலையில் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. கூட்டணி பேச்சு வார்த்தை, ஆளுங்கட்சி எதிர்க்கட்சி குற்றச்சாட்டுகள், சாதனைகளை எடுத்துரைத்தல் என தேர்தலுக்கான அனைத்து திட்டங்களும் தொடங்கிவிட்டன. பா ஜா க அரசு தமிழகத்தில் சுடச் சுட இட்லியை மக்களுக்கு கொடுத்து அவர்களது ஆசியை பெறும் புதுத் திட்டத்தை கொண்டு வந்துள்ளது.

பத்து ரூபாய்க்கு நான்கு இட்லிகள் என மோடி பெயரிடப்பட்ட இட்லிகள் தமிழகத்தின் சேலம் மாவட்டத்தில் விரைவில் வழங்கப்பட இருக்கின்றது. இதை விளம்பரப்படுத்தும் முயற்சியாக நகரின் பல பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

சுவரொட்டியில் இடது பக்கத்தில் மோடியின் புகைப்படமும், வலது பக்கத்தில் பா ஜா க பிரச்சார செல் மாநில துணைத்தலைவர் மகேஷின் புகைப்படமும், நடுவில் பத்து ரூபாய்க்கு நான்கு இட்லிகள் என எழுதப்பட்டுள்ளது.

அதிநவீன கருவிகளுடன் சுகாதாரமான முறையில்தயாரிக்கப்படும் சுவை மற்றும் ஆரோக்கியம் நிறைந்த இட்லிகள் வழங்கப்படவுள்ளன என சுவரொட்டிகளில் எழுதப்பட்டுள்ளது.

தமிழக முதலமைச்சர் பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலத்தில் விரைவில் மோடி இட்லிகள் விற்பனைக்கு வரவுள்ளன. சூடு பறக்கும் இட்லிகளுடன் தேர்தல் களமும் சூடு பிடிக்க காத்திருக்கிறது.

குஷ்பூ இட்லியை பார்த்த தமிழகத்திற்கு இப்பொழுது மோடி இட்லி கொஞ்சம் புதுசு தான்.

Exit mobile version