உலகின் மிக உயரமான முருகன் சிலைக்கு
ஹெலிகாப்டரில் பூக்கள் தூவி குடமுழுக்கு..!!

Salem murugan temple
muthumalai murugan temple

உலகிலேயே மிக உயரமாக கட்டப்பட்டுள்ள முருகன் சிலைக்கு ஹெலிகாப்டர் மூலம் பூக்கள் தூவி குடமுழுக்கு செய்யப்பட்டுள்ளது பக்தர்களை பரவசப்படுத்தியது.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகேவுள்ள உத்தரகவுண்டன்பாளையத்தில் உலகிலேயே மிக உயரமான சிலை கட்டப்பட்டுள்ளது. மொத்தம் 146 அடி உயரம் கொண்ட இந்த முத்துமலை முருகன் சிலையை கட்டமைக்கும் பணிகள் 4 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது.

இந்நிலையில் அதற்கான குடமுழுக்க் இன்று கோலாகலமாக நடைபெற்றது. இதற்கான நிகழ்வில் திருவாரூர் சுந்தரமூர்த்தி சிவாச்சாரியார் மற்றும் அறுபடை முருகன் கோயில் குருக்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். தொடர்ந்து பல்வேறு ஊர்களில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீரை ஊற்றி குடமுழுக்க நிகழ்வு நடைபெற்றது.

அப்போது முருகன் சிலைக்கு மேலா ஹெலிகாப்டர் கொண்டுவரப்பட்டு, அதிலிருந்து சிலை மீது மலர் தூவப்பட்டது. இந்த காட்சி திரளான பக்தர்களை பரவசப்படுத்தியது. இந்த நிகழ்வில் பங்கேற்பதற்காக சேலம் மற்றும் அதை சுற்றியுள்ள ஊர்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

Exit mobile version