சசிகலா வந்த காரில் இருந்து அ.தி.மு.க கொடி அகற்றப்பட்டது. பின்னர் அ.தி.மு.க கொடி பொருத்திய வேறு ஒரு காரில் அவர் புறப்பட்டார்.
சிறைத் தண்டனைக்குப் பிறகு 4 ஆண்டுகள் கழித்து தமிழகம் வரும் சசிகலாவுக்கு ஏகோபித்த வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது. அவர் தமிழகம் வந்த பிறகு அ.தி.மு.க-வில் பல மாற்றங்கள் வரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சசிகலா கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பின்னர் சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்படும்போதே அ.தி.மு.க கொடி பொருத்திய ஜெயலலிதா காரில் பயணம் செய்தார். அவர் அ.தி.மு.க கொடியை பயன்படுத்தியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதையடுத்து அ.தி.மு.க நிர்வாகிகள் டி.ஜி.பி-யிடம் புகார் அளித்தனர். சசிகலா அ.தி.மு.க கொடியை பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். அதன்படி காவல்துறையும் சசிகலாவை எச்சரித்து இருந்தது. ஆனால் அவர் அ.தி.மு.க கொடி பொருத்திய காரையே பயன்படுத்தினார். ஆனால் தமிழக எல்லையான ஜூஜூவாடி அருகே வந்தபோது அந்தக் காரில் இருந்து அ.தி.மு.க கொடி அகற்றப்பட்டது. பின்னர் அ.தி.மு.க கொடி பொருத்திய வேறு ஒரு காரில் அவர் புறப்பட்டார்.