சென்னை: பெண் தொகுப்பாளர் குறித்து அவதூறான கருத்துகளைப் பரப்பியதாகத் தொடரப்பட்ட வழக்கில், யூடியூபர் சவுக்கு சங்கருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பெண் தொகுப்பாளருக்கு எதிராகச் சமூக வலைதளம் மற்றும் இணையவழியில் அவதூறான கருத்துகள் பரப்பப்பட்டதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் இந்த வழக்கு தொடரப்பட்டது. வழக்கின் விசாரணை எழும்பூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
மூன்று ஆண்டுகள் சிறை
வழக்கில் முன்வைக்கப்பட்ட வாதங்களையும் ஆவணங்களையும் பரிசீலித்த மேஜிஸ்திரேட், சவுக்கு சங்கருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து இன்று உத்தரவிட்டார். தீர்ப்பின் விரிவான விவரங்கள் மற்றும் மேல்முறையீடு தொடர்பான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.
