அரசுப் பள்ளிகளில் பதவி உயர்வு வழங்க பள்ளிக் கல்வித்துறை முடிவு

தமிழக அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள கலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, 20 சதவீத பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

மாநிலம் முழுவதும் உள்ள தொடக்கப் பள்ளிகளில், காலியாக உள்ள கலை ஆசிரியர் பணியிடங்களில், ஆசிரியர் அல்லாத பணியாளர்களை பதவி உயர்வு மூலம் நிரப்ப பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

பள்ளிக் கல்வித்துறையின் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றும் காவலர்கள், உதவியாளர்கள், எழுத்தர்கள், நூலகர்களில் கவின்கலைப் படிப்பு அல்லது தொழிற்படிப்பு முடித்துள்ள தகுதியானவர்களுக்கு கலை ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்க பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. எனவே, மாவட்டங்களில் காலியாக உள்ள கலை ஆசிரியர் பணியிடம், கலை ஆசிரியராக நியமனம் செய்ய தகுதியான பணியாளர்களின் பட்டியல் உள்ளிட்ட விவரங்களை செப்டம்பர் 10-ஆம் தேதிக்குள் ஒப்படைக்க, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Exit mobile version