தனியார் பள்ளிகளில் முதல் தவணை தொகை கட்டுவதற்கான கால நிர்ணயம்இந்த மாதம் இறுதி வரை நீட்டித்து உத்தரவு

கல்வி கட்டணம் வசூலிக்க தமிழக அரசு பிறப்பித்த தடை உத்தரவை எதிர்த்து தனியார் பள்ளிகள்வழக்கு தொடர்ந்திருந்தது இது சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அதில் அதிககட்டணம் வாங்கியது தொடர்பாக மொத்தம் 75 புகார்கள் வந்துள்ளதாக பள்ளிக்கல்வி துறை தரப்பில் கூறப்பட்டது.
கூடுதல் தொகை வசூலித்த 29 பள்ளிகளுக்கு துறைரீதியான விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற உத்தரவை மீறி அதிக தொகையை கேட்கும் பள்ளிகள் குறித்த பட்டியலை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாத பள்ளிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு போடப்படும் என்றும் எச்சரிக்கை செய்துள்ளார்.