சமூக வலைத்தளங்களில் டிரெண்டாகும் #Scrab EIA 2020 ஹாஸ்டாக்குகள்!.EIA வின் பயன்பாடு என்ன?

சமூக வலைத்தளங்களில் Scrab EIA 2020,Tamilnadu rejet EIA ஹாஸ்டாக்குகள் டிரெண்டாகி வருகிறது.
#Scrab EIA 2020 hashtags are trending on social networking sites!

இந்தியாவின் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் முக்கியப் பங்கு வகிப்பது சூழலியல் தாக்க மதிப்பீடு வரைவு தான்.(Environment IMpact Assessment). இதன் மூலம் புதிய தொழிற்சாலை , நிறுவனம், சுரங்கம் போன்ற  எதுவாக  இருந்தாலும்,  சூழலியல் தாக்க மதிப்பீடு வரைவில் உள்ள பகுதியிலும் அங்கு வாழும் மக்களின் வாழ்வாதாரத்தில் என்ன மாதிரியான மாற்றங்களை ஏற்படுத்தும் எனவும், அந்த மாற்றங்களினால் மக்கள் சந்திக்கும் சாதகம் , பாதகம் என்னென்ன என்பதை இந்த வரைவு சட்டம் மூலம் அறிய முடியும். 

ஒரு நாட்டின் வளம்புதிய தொழிற்சாலைகளால்   பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக இந்த சூழலியல் தாக்க மதிப்பீடு வரைவு சட்டம் 2006 முதல் நடைமுறையில் உள்ளது. இந்த நிலையில் தான் 2020 ஆம் ஆண்டுக்கான புதிய வரைவு கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்டது. இதனையடுத்து இச்சட்டம் குறித்து மக்கள் கருத்துக்கான கால அவகாசம் தற்போது ஆகஸ்ட் 11 ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஏன் மக்களும், அரசியல் கட்சியினர், சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர் என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.

EIA  எதிர்ப்பிற்கான காரணம் என்ன?

மத்திய அரசு கொண்டு வர இருக்கும் EIA 2020 எனும் புது சட்டத்தால், தமிழ்நாட்டின் மேற்கு தொடர்ச்சி மலை தகர்க்கப்பட்டு, கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்படும் எனவும் இதற்காகா மக்கள் போராடவோ, எதிர்க்கவோ கூடாது என்பது இச்சட்டத்தின் முக்கிய அம்சமாகும். இது தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல, இந்தியாவின் அனைத்து இயற்கை வளங்களும் பொருந்தும். எனவே மத்திய அரசின் புதிய சூழலியல் தாக்க மதிப்பீடு 2020 ஆம் ஆண்டிற்காக சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு எதிரான பல்வேறு அம்சங்களை கொண்டிருப்பதால் இதனை தமிழ்நாட்டில் ஏற்றுக்கொள்ள முடியாது என்ற விமர்சனங்கள எழுந்துவருகிறது.

மேலும் இந்த சட்ட வரைவானது நமது சுற்றுச்சூழலுக்கும், மனிதர்களுக்கும் பேராபத்தை விளைவிக்கும் என #TNRejectsEIA2020, #ScrapEIA  ஆகிய ஹாஸ்டாக்குகளும் சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது. மேலும் இந்த சூழலியல் மதிப்பீடு வரைவு சட்டமாவதற்குள்ளே மக்கள் அனைவரும் தங்களது எதிர்ப்பினை இ-மெயில் வாயிலாக அல்லது சமூக வலைத்தளங்களில தெரிவிக்க வேண்டும் என சூற்றுச்சூழல் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துவருகின்றனர்.

Exit mobile version