தமிழ் நாடு முழுவதும் வடகிழக்கு பருவமழை மிகத்தீவிரம் அடைந்துள்ளது, குறிப்பாக தலைநகர் சென்னையில் மழை வெளுத்து வாங்குகிறது தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் வீடுகளுக்குள் புகுந்துள்ளது இதனால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.
சென்னைக்கு குடிநீர் ஆதாரமான ஏரிகள் நிரம்பி வருகின்றன இதனால் மக்கள் பெரும் பயத்தில் உள்ளனர் 2015 ஆம் ஆண்டு செம்பரம்பாக்கம் ஏரியை திறந்து விட்டது போல் இந்த ஆண்டும் திறக்க போகிறார்கள் என சமூக வலைத்தளங்களில் வதந்தி பரவி வருகிறது
இதனிடையே செம்பரம்பாக்கம் ஏரியில் பொதுப்பணித்துறையின் தலைமை பொறியாளர் அசோகன் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதைத்தொடர்ந்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது:
செம்பரம்பாக்கம் ஏரியின் தற்போதைய நீர்மட்டம் 21.17 அடியாக உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு 450 கனஅடி நீர் வந்துகொண்டு இருக்கின்றது. தற்போதைய நிலையில் செம்பரம்பாக்கம் ஏரி திறக்க வாய்ப்பு இல்லை.மொத்தமுள்ள 909 ஏரிகளில் 67 ஏரிகள் நிரம்பி உள்ளன. 127 ஏரிகள் 75% கொள்ளளவை எட்டியுள்ளன. 206 ஏரிகள் 50 சதவீத கொள்ளளவை எட்டியுள்ளன எனக்கூறினார்.
செம்பரம்பாக்கம் ஏரி நீர்மட்டம் 22 அடியை தாண்டியதும் வெள்ள அபாய அறிவிப்பு வெளியிடப்பட்டு ஏரி திறக்கப்படும் என கூறினர்2015 நடந்தது போல அதிகளவு மழை இப்போது பெய்யவில்லை இதனால் மக்கள் அச்சப்படதேவையில்லை என
அவர் கூறினார்.