இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் இரா.நல்லகண்ணு மருத்துவமனையில் அனுமதி

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் இரா.நல்லகண்ணு, காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது நலமுடன் இருக்கிறார் என, அக்கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் இரா.நல்லகண்ணு. 94 வயதாகும் இவர், கடந்த சில நாட்களாக காய்ச்சலால் அவதிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்றிரவு சென்னையில் உள்ள ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிக்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சையளித்து வருவதுடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொரோனா பரிசோதனையும் மேற்கொண்டுள்ளனர்.

இதுதொடர்பாக, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர், விடுதலைப் போராட்ட வீரர் இரா.நல்லகண்ணு தற்போது நலமுடன் இருக்கிறார் எனவும், கட்சியினர் மற்றும் நண்பர்கள், அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டும், நேரில் பார்த்தும், நலம் விசாரிக்க முயல்வதை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version