சசிகலா 27-ம் தேதி விடுதலை : சொகுசு விடுதியில் தங்க ஏற்பாடு

சசிகலா 27-ம் தேதி விடுதலை வரவேற்பு அளிக்க, அமமுக நிர்வாகிகள் தயாராகி வருகின்றனர்.

பெங்களூரு :

சொத்து குவிப்பு வழக்கில், சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கு, பெங்களூரு 4 ஆண்டுகள் சிறை தண்டனையை நீதிமன்றம் விதித்தது. இதையடுத்து, 3 பேரும், பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டனர். சிறையில் சசிகலா விதிமுறைகளை மீறி, சிறப்பு சலுகையை அனுபவித்ததாக குற்றச்சாட்டு இருந்ததால், அவர் முன்கூட்டியே விடுதலையாவதில் சிக்கல் இருந்தது.

இதைத்தொடர்ந்து சசிகலா கடந்த மாதம் அபராத தொகை செலுத்தினார்.வருகிற 27-ந் தேதி சசிகலா விடுதலை உறுதியானது. விடுதலையாகி வெளியே வரும் சசிகலாவுக்கு கர்நாடக தமிழக எல்லையான, ஓசூர் ஜூஜூவாடி பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் வரவேற்பு அளிக்க, அ.ம.மு.க., நிர்வாகிகள் தயாராகி வருகின்றனர்.

Read more – பொங்கல் அன்று மாநாடு திரைப்படத்தின் டீஸர் : வெளியான புதிய மாஸ் அப்டேட்..!

தமிழக எல்லைக்கு வருவதற்கே, இரவு வெகு நேரம் ஆகிவிடும் என்பதால், சசிகலா, சென்னை செல்லாமல், ஓசூரிலுள்ள தனியார் சொகுசு விடுதியில் அல்லது சூளகிரி அருகே உள்ள ஓட்டல் ஒன்றில், தங்க அதிகவாய்ப்புள்ளது. அ.ம.மு.க.வினர் சிலர் சசிகலா வருகிற 27-ந் தேதி இரவு விடுதலையாகி பெங்களூருவில் தங்கி விட்டு மறுநாள் 28-ந் தேதி காலைதான் அங்கிருந்து புறப்பட்டு ஓசூர் வழியாக சென்னை செல்வார் என்றும் தெரிவித்தனர்.

Exit mobile version