வாயைக் கொடுத்து மாட்டிக்கொண்ட ராஜேந்திர பாலாஜி..

வாயைக் கொடுத்து மாட்டிக்கொண்ட நிலையில் அதிமுக மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் அமைச்சருமான ராஜேந்திர பாலாஜி உள்ளதாக அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் அதிமுக ஆட்சி நடைபெற்று வருகிறது. மேலும் கட்சியின் முக்கிய பொறுப்புகள் 2 பேரிடம் மட்டுமே உள்ளன

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, அதிமுகவுக்குள் இரட்டை தலைமை விவகாரம் வெடித்தது. அதேபோல முதல்வர் வேட்பாளர் யார் என்ற பிரச்சினையும் தொடங்கியது.
இதனால் அமைச்சர்கள் தரப்பினர் ஓபிஎஸ் – இபிஎஸ் தரப்பினரிடையே சமாதானம் செய்து, இறுதியில் ஒரு சுமூக முடிவுக்கு வந்தனர். என்றாலும் ஆனால் இதற்குக் காரணம் ராஜேந்திர பாலாஜிதான் என்று அப்போது பரபரப்பாகப் பேசப்பட்டது.இந்நிலையில் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்படுவதாகக் கூறி ராஜேந்திர பாலாஜியின் மாவட்ட செயலர் பதவி பறிக்கப்பட்டது.


பின்னர் அவருக்கு அதே பதவி வழங்கப்பட்டது. ஆனால் இது ஓபிஎஸ் தரப்புக்குப் பிடிக்கவில்லை.
இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு அதில் ஒரு பகுதிக்கு ராஜேந்திரபாலாஜியும், மற்றொரு பகுதிக்கு ரவிச்சந்திரனும் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதனால் ராஜேந்திர பாலாஜி தரப்பு மிகவும் அப்செட் ஆகியுள்ளதாம். வாயைக் கொடுத்து வாங்கிக் கட்டிக் கொண்ட கதையாக அல்லவா உள்ளது என்று அவர் தரப்பினர் புலம்பிக் கொண்டிருக்கின்றனராம்.

Exit mobile version