சென்னையில் அக்டோபர் 7 ம் தேதி முதல் மின்சார ரயில் சேவை தொடரும் -தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னையில் வரும் அக்டோபர் 29ம் தேதி முதல் மின்சார ரெயில் சேவை தொடங்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னை:

மின்சார ரயில் :

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு முன்னெச்சரிக்கை கடந்த மார்ச் 25-ம் தேதி முதல் நிறுத்தப்பட்ட ரயில் சேவை பின்னர் வெளிமாநில தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்கள் செல்வதற்காக இயக்கப்பட்டது. பின்னர், தமிழகத்திலும் கோவிட் 19 சிறப்பு ரயி்ல்கள் மட்டுமே இயக்கப்பட்டு வந்தது.

கடந்த 1 ம் தேதி முதல் தமிழகத்தில் பேருந்து சேவைகள் மீண்டும் வழக்கம்போல தொடங்கப்பட்டது. மெட்ரோ ரயில் சேவைகள் தொடங்கப்பட்ட நிலையில், சென்னையில் புறநகர் ரயில் சேவைகளும் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், புறநகர் ரெயில் சேவை தொடங்கப்படவில்லை. இது காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு பணிக்கு வருபவர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

மின்சார ரயில்:

இந்த சூழலில், அக்டோபர் 7-ம் தேதியில் இருந்து புறநகர் மின்சார ரயில் சேவை மீண்டும் சென்னையில் தொடங்கப்படும் என தெற்கு ரெயில்வே தகவல் தெரிவித்துள்ளது.
புறநகர் ரெயில் சேவையில் பணியாற்றும் 100 சதவீத பணியாளர்களை 1-ம் தேதியில் இருந்து சுழற்சி முறையில் இல்லாமல் முழுமையாக பணிக்கு வரும்படி அறிவுறுத்தல் செய்துள்ளனர்.

பணிகள் தீவிரம்:

450-க்கும் மேற்பட்ட புறநகர் ரெயில் சேவை தினசரி செயல்பட்டு வந்த நிலையில் தற்போது தினமும் 300 முறை ரயில்கள் இயக்க திட்டம் என தகவல் வெளியாகியுள்ளது. பின்னர் தேவைக்கு ஏற்ப முழுமையாக சேவை துவங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
புறநகர் ரெயில் சேவை எங்கே வரை செயல்படும், எத்தனை முறை என்ற திட்டம் தற்போது வரையறுக்கப்பட்டு வருகிறது. புறநகர் ரெயில் சேவையை தமிழக அரசு அனுமதிக்க தயாராக இருக்கிறது என தெற்கு ரெயில்வே அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version