தூத்துக்குடி-மைசூர் எக்ஸ்பிரஸ் ரயில் நேரம் மாற்றம் : தெற்கு ரயில்வே அறிவிப்பு

தூத்துக்குடி-மைசூர் எக்ஸ்பிரஸ் ரயில் நேரம் மாற்றப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

மதுரை:

பயணிகளில் வசதிக்காக கர்நாடகா மாநிலம், மைசூரிலிந்து மதுரை மார்க்கமாக தூத்துக்குடி வரை இயக்கப்படும் எக்ஸ்பிரஸின் ரயில் சேவையை கால நீட்டிப்பு செய்வதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.அதன் அடிப்படையில்,மைசூர்-தூத்துக்குடி(வ.எண்.06236) சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் அடுத்த மாதம் 30 ம் தேதி வரை இயக்கப்படுகிறது.

தூத்துக்குடி-மைசூர் (வ.எண்.06235) சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் அடுத்த மாதம் 31 ம் தேதி வரையும் நீடிக்க செய்யப்பட்டுள்ளது.இந்த ரயில்களின் மாற்றம் பெற்ற நேர அட்டவணைப்படி, மதுரை கோட்டத்திற்கு உட்பட பகுதிகளில் புதன்கிழமை (நாளை) முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Read more – 27 வது நாளாக தொடரும் விவசாய போராட்டம் : மத்திய அரசின் பேச்சுவார்த்தையை நிராகரித்த விவசாய அமைப்பினர்

மைசூர் எக்ஸ்பிரஸ் ரயில் திண்டுக்கல்லில் இருந்து காலை 6.30 மணிக்கு பதிலாக 6.35 மணிக்கு புறப்பட்டு ர தூத்துக்குடிக்கு காலை 11.10 மணிக்கு சென்றடையும்.மறு மார்க்கமாக தூத்துக்குடியில் இருந்து மாலை 4.25 மணிக்கு பதிலாக மாலை 4.30 மணிக்கு புறப்பட்டு மதுரை வழியாக திண்டுக்கல் சென்றடையும். திண்டுக்கல்லில் இருந்து இரவு 9.15 மணிக்கு பதிலாக இரவு 9.20 மணிக்கு மைசூர் சென்றடைகிறது.எனவே பொதுமக்கள் உரிய நேரத்தை கணக்கிட்டு ஏற்பாடுகள் செய்துகொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Exit mobile version