இன்று மதியம் 2 மணி வரை சென்னையில் உள்ள முன்பதிவு மையங்கள் செயல்படும் – தெற்கு ரயில்வே

இன்று மதியம் 2 மணி வரை சென்னையில் உள்ள ரெயில்வே கோட்டத்தின் முன்பதிவு மையங்கள் செயல்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னை:

இன்று உலகம் முழுவதும் தீபாவளி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அடுத்ததாக பண்டிகை முடிந்து மக்கள் அதிகம் பயன்படுத்தும் பொது போக்குவரத்து சேவை பெரிதும் அவசியமான ஒன்றாக கருதப்படுகிறதுஇந்த நிலையில் மக்களின் பயன்பாட்டிற்கும் மற்றும் மக்களின் பாதுகாப்பான பயணத்தையும் கருத்தில் கொண்டு தெற்கு ரயில்வே ஒரு முடிவை எடுத்துள்ளது.இதன் படி இன்று மதியம் 2 மணி வரை சென்னையில் உள்ள ரயில்வே கோட்டத்தின் முன்பதிவு மையங்கள் செயல்படும் .

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தியில், “சென்னை ரயில்வே கோட்டத்தின் கீழ் செயல்படும் அனைத்து டிக்கெட் முன்பதிவு மையங்களும் ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணைப்படி (சனிக்கிழமை) இன்று காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டும் செயல்படும் என்றும் இதை பாதுகாப்பான முறையில் பயன்படுத்தி கொள்ளுமாறு தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Exit mobile version