பாடகி பி. சுசீலா உருவம் பொறித்த தபால் தலை வெளியீடு..!!

p shusheela
P. Shusheela

தென்னிந்திய சினிமாவின் கொண்டாடப்படும் பிரபல பின்னணிப் பாடகி பி. சுசீலா உருவம் பொறித்த சிறப்பு தபால் தலையுடன் கூடிய போஸ்டல் கவரை தபால் துறை சார்பில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பி. சுசீலா இதுவரை 30 ஆயிரத்தும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். காலத்தால் அழியாத பல பாடல்களை அவர் தமிழில் பாடியுள்ளார். தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, ஒடிசா உள்ளிட்ட மொழிகளிலும் அவர் பாடியுள்ளார்.

இந்நிலையில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு பி. சுசீலாவின் சாதனைகளை கவுரவிக்கும் விதமாக, இந்திய அஞ்சல்துறை அவருடைய பெயரில் சிறப்பு அஞ்சல் தலையை வெளியிட்டது.

விசாகப்பட்டினம் போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் வெங்கடேஷ்வரலு தபால் தலையை வெளியிட்டார். இந்த விழாவில் துணை போஸ்டர் மாஸ்டர் ஜெனரல் பாலசரஸ்வதி மற்றும் கிருஷ்ணா ஸ்வீட்ஸ் முரளி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Exit mobile version