ஆயிரம் விளக்கு தி.மு.க. MLA வாக இருப்பவர் கு.க.செல்வம் மாவட்ட செயலாளர் பதவி கிடைக்காத விரக்தியில் டெல்லியில் இன்று மாலை பாஜக தலைவர் ஜே. பி. நட்டா முன்னிலையில் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியுள்ளது.

இதனையடுத்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
ஆலோசனை கூட்டத்தில் தி. மு. க. வின் மூத்த நிர்வாகிகளான துரைமுருகன், ஆர்எஸ் பாரதி, கலந்து கொண்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
ஏற்கனவே திமுகவின் துணை பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட வி.பி. துரைசாமி பாஜகவில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.