தகவல் அளிக்க மறுத்த அதிகாரிக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்- மாநில தகவல் ஆணையம் அதிரடி உத்தரவு

விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகாவில் அரசு நிலங்கள் ஆக்கிரமிப்பு குறித்து கடந்த 10 ஆண்டுகளுக்கு தகவல் தர மறுத்த அலுவலருக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டத்தில் உள்ள தென்கோடி பாக்கம் கிராமத்தில் உள்ள அரசு புறம்போக்கு நிலங்கள் மற்றும் ஆக்கிரமிப்பு குறித்த விவரங்களை கேட்டு வழக்கறிஞர் அசோக்குமார் என்பவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் தகவல் பெற மனு செய்தார். ஆனால், வழக்கமான நடைமுறையில் பல காரணங்கள் கூறி தகவல்கள் வழங்கப்படாமல் பல ஆண்டுகள் அலைக்கழிக்க பட்டதால், இது குறித்து தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் வழக்கு மனு தாக்கல் செய்யப் பட்டதாகவும், அம்மனுவை விசாரித்த மாநில தகவல் ஆணையம், பொதுத் தகவல் அலுவலருக்கு தகவல் தர உத்தரவிட்டது.

இந்த உத்தரவை செயல்படுத்தாமல் அலுவலர் மீண்டும் தகவல்கள் தர மறுத்ததால் மனுதாரரான அசோக்குமார் மாநில தகவல் ஆணையத்திடம் மேல்முறையீடு தாக்கல் செய்தார். இம்மனுவை விசாரித்த தகவல் ஆணையம் தகவல் அளிக்காத மாநில தகவல் ஆணையம், பொதுத் தகவல் அலுவலருக்கு அபராதம் துறை ரீதியான நடவடிக்கை ஏன் எடுக்கக்கூடாது என விளக்கம் கேட்டு அறிவிப்பு அனுப்பப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழ்நாடு தகவல் ஆணையம் நவ. 20ல் பிறப்பித்த உத்தரவில் தகவல் தர மறுத்த பொது தகவல் அலுவலருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து மற்றும் துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியருக்கு மாநில தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Exit mobile version