பெரம்பலூர் சர்க்கரை ஆலையில் விபத்து : வெட்டிய கரும்புகளை உடனே வேறு ஆலைக்கு அனுப்ப வேண்டும் என விவசாயிகள் சங்க தலைவர் கோரிக்கை

பெரம்பலூர் சர்க்கரை ஆலையில் திடீரென ஏற்பட்ட விபத்தால் வெட்டிய கரும்புகளை உடனே வேறு ஆலைக்கு அனுப்ப வேண்டும் என விவசாயிகள் சங்க தலைவர் கோரிக்கை வைத்துள்ளார்.

பெரம்பலூர் :

பெரம்பலூர் சர்க்கரை ஆலையில் திடீரென ஏற்பட்ட விபத்தால் வெட்டிய கரும்புகளை உடனே வேறு ஆலைக்கு அனுப்ப வேண்டும் என விவசாயிகள் சங்க தலைவர் மு. ஞானமூர்த்தி அரசுக்கு வேண்டுதல் விடுத்துள்ளார்.

கொரோனா பரவல் காரணமாக மார்ச் மாதம் மூடப்பட்ட பெரம்பலூர் சர்க்கரை ஆலை கடந்த டிசம்பர் மாதம் துவங்கப்பட நல்ல நிலையில் இயங்கி வந்துள்ளது. ஒரு நாளைக்கு 3000 ம் டன்னுக்கு மேல் கரும்புகளை அரைத்துவந்த நிலையில் இன்று (பிப்.2) மாலை SLR11,12,13,14 என்கிற கிரீசலைட்டர் 4 என்ற மெஷின் உடைந்தும், மேலும் இங்சக்க்ஷன் பேனலில் விழுந்ததால் அதுவும் உடைந்துள்ளது.

இதனால் கிரீசலைட்டர்களில் வந்துகொண்டிருந்த (ஏ1)சர்க்கரை பாகு இங்சக்‌ஷன் பேனலில் ஓடிய தண்ணீருடன் கலந்து கரைந்து தரைதளத்தில் வீணாக ஓடியுள்ளது. இதுகுறித்து விவசாயிகள் சங்க தலைவர் மு. ஞானமூர்த்தி தெரிவிக்கையில், சர்க்கரை ஆலையில் உள்ள எந்திரங்கள் 1977 மற்றும் 1990 ல் போடப்பட்டு இருந்தது. எனவே இவற்றை புதுப்பிக்க வேண்டும் என பலமுறை அரசிற்கு கோரிக்கை வைத்தோம்.

உதாரணத்திற்கு இந்த பகுதியில் இயங்கும் 7,8 பேஃன்கள் பலகீனமாக உள்ளது. அதை மாற்ற வேண்டும் என பலமுறை சொல்லியும் இதுவரை மாற்றப்படவில்லை.அதிகாரிகளின் கவனக்குறைவால் இந்த விபத்து ஆலையில் நடந்திருக்கிறது. இதை சரிசெய்ய இன்னும் ஒருவாரகாலம் ஆகும் என தெரிகிறது.எனவே உடனடியாக அதிகாரிகள் தலையிட்டு ஆலையை புணரமைக்க வேண்டும். வெட்டிய கரும்புகளை காயவிடாமல் உடனே அடுத்தாலைக்கு அனுப்ப வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Exit mobile version