தி.மு.க. முக்கிய பிரமுகர் தற்கொலை முயற்சி… மருத்துவமனையில் தீவிர சிகிச்சை…

தி.மு.க. பெண் எம்.எல்.ஏ. பூங்கோதை அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரை உட்கொண்டு தற்கொலை முயற்சி செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
Poongothai Aladi Aruna

நெல்லை மாவட்டம் ஆலங்குளம் தொகுதி தி.மு.க., எம்.எல்.ஏ.,வும், முன்னாள் அமைச்சருமான பூங்கோதை ஆலடி அருணா, சற்று முன் திடீரென அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரையை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

பூங்கோதை தற்போது நெல்லை ஜங்ஷனினில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பயப்படும்படி ஒன்றும் இல்லை எனவும், தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது எனவும் மருத்துவமனை வட்டாரம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து தகவலறிந்த தி.மு.க., நிர்வாகிகள் மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர். 

பூங்கோதை எதற்காக தற்கொலைக்கு முயற்சி செய்தார் என்ற காரணம் இதுவரை தெரியாததால், போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பூங்கோதையின் இந்த திடீர் தற்கொலை முயற்சி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குடும்ப பிரச்சனையா? அல்லது கட்சியில் ஏதேனும் பிரச்சனையா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version