SeithiAlai

10-ஆம் வகுப்புத் தேர்ச்சி பெற்றவர்களுக்கு இனிப்பான செய்தி!!!

தமிழகத்தில் பத்தாம் வகுப்புத் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் இன்று முதல் வேலைவாய்ப்பு இணையதளத்தில் பதிவு செய்யலாம் என வேலைவாய்ப்புத்துறை அறிவித்துள்ளது.

10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு இன்றுமுதல் மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளது. இந்நிலையில், நவம்பர் 6-ஆம் தேதிக்குள் மாணவர்கள் அந்தந்த பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு இணையதளத்தில், இணையதளம் வாயிலாக பதிவு செய்யதுக்கொள்ளலாம் என்று வேலைவாய்ப்புத்துறை தெரிவித்துள்ளது. இதை அரசுப்பள்ளிகள், அரசு உதவிப் பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் என அனைவரும் பின்பற்றிக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வேலைவாய்ப்புத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் அறிவித்துள்ளதாவது, மாணவர்களின் ஆதார் எண், மின்னஞ்சல் முகவரி மற்றும் செல்பேசி எண்கள் கட்டாயம் என்றும் மாணவர்களின் குடும்ப அட்டை, ஆதார் அட்டை, கடவுச்சீட்டு, மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை ஆகியவை முகவரி அடையாள அட்டைகளில் முக்கியமான ஒன்றாக கருதப்படுவதால், இவை அனைத்தும் கட்டாயம் தேவை என்றும் அறிவித்துள்ளது.

Exit mobile version